நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யும்!! ஏனைய பகுதிகளில் வரண்ட வானிலையே நீடிக்கும்!

#SriLanka #weather #Rain #Meteorology
Thamilini
1 month ago
நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யும்!! ஏனைய பகுதிகளில் வரண்ட வானிலையே நீடிக்கும்!

மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வவ்போது மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

குறித்த மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வடமேற்கு மாகாணத்திலும் பகல் நேரத்தில் பலமுறை மழை பெய்யும் என்றும், நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள், பலத்த காற்று மற்றும் விட்டுவிட்டு பெய்யும் மழைக்கு எதிராகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!