அத்தியாவசிய பழுதுபார்ப்புப் பணிகளுக்காக மூடப்படும் ரயில் பாதைகள் - ரயில்வே திணைக்களம் விசேட அறிவிப்பு!
அத்தியாவசிய பழுதுபார்ப்புப் பணிகள் காரணமாக, களனி ரயில் பாதையில் போக்குவரத்து சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய நாவல-நாரஹேன்பிட்ட ரயில் கடவை மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, நாரஹேன்பிட்டா மற்றும் நுகேகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள வீதிக் கடவையில் அவசர புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்காரணமாகவே ரயில்சே தடைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, களனிப் பள்ளத்தாக்கு இரயில் பாதையில் கொழும்பு கோட்டை மற்றும் நுவகொட இரயில் நிலையங்களுக்கு இடையேயான இரயில் சேவைகள் ஆகஸ்ட் 1 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இடைநிறுத்தப்படும்.
மேலும், களனிப் பள்ளத்தாக்கு இரயில் பாதையில் சனிக்கிழமை மாலை மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை இயக்கப்படும் இரயில் சேவைகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணைகளையும் இரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பயணிகள் இந்த தற்காலிக மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு, தேவையான பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே