கிளிநொச்சியில் சாரதி அனுமதி பத்திரம் புதுப்பிக்க(Licence Renew) கடினமா?

#SriLanka #Kilinochchi #government #LANKA4 #Office #driver's licenses #L4
Prasu
1 month ago
கிளிநொச்சியில் சாரதி அனுமதி பத்திரம் புதுப்பிக்க(Licence Renew) கடினமா?

இலங்கையில் எல்லா விபரமும் அறிந்து கொண்டு சாரதி அனுமதிபத்திரம் புதுப்பிக்க செல்லுதல் கூடுதல் சிரமத்தை தவிர்க்கும்.

முதலில் எங்களது சாரதி அனுமதிப்பத்திரம் காலவதி ஆகும் முதலே 1 மாதம் முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். பொதுவாக 10 முதல் 12 நாட்களின் பின்னர் முன்பதிவு திகதி வரும். 

அதற்குள் மருத்துவ முன்பதிவு (ஆன்லைன்) அல்லது நேரடியாகவோ சென்று எடுத்து வைக்கலாம். மருத்துவ அறிக்கை எடுக்க 1500 ரூபாய் முடியும்.

உங்கள் தேசிய அடையாள அட்டை பிரதி, வாகன அனுமதிபாத்திரம் பிரதி அத்தோடு ஒரு கருப்பு பேனை வாங்கி வைத்து கொள்ளுங்கள். 

அவர்கள் தரும் படிவத்தை கருப்பு பேனையால் தான் நிரப்ப வேண்டும். அந்த படிவம் சிங்களத்தில் தான் அச்சிடப்பட்டிருக்கும்.

ஆங்கிலத்தில் நிரப்பி ஒரு மாதிரி ஒட்டி இருக்கும். அதை பார்த்து ஆங்கில கேப்பிடல் எழுத்தில் நிரப்பி கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு 50 ரூபாய் முடியும். 

 பிறகு Passport Size போட்டோ எடுத்து கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு 500 ரூபாய் முடியும்.

இவை எல்லாம் சரி என்றால் அவர்கள் முன்பதிவு பண்ணி கொடுத்த திகதியில் சென்று படிவத்தை நிரப்பி கொடுத்து மருத்துவ அறிக்கை, தேசிய அடையாள அட்டை பிரதி, வாகன அனுமதிபாத்திரம் பிரதி, Passport Size Photo எல்லாம் கொடுத்து 3525/= பணத்தினை செலுத்திவிட்டு கொஞ்ச நேரம் காத்திருந்தால் தற்காலிகமாக பயன்படுத்த ஒரு சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும்.

பிறகு வீட்டு முகவரிக்கு சாரதி அனுமதி பத்திரம்(Driving licence) வரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!