பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் 12வது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம் திறந்து வைக்கப்பட்டது.

#SriLanka #Road #Mullaitivu #Lanka4 #Paranthan #Bridge #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியில் 12வது கிலோமீற்றர் தூரத்தில் உள்ள முதலாவது பாலம் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தின் A35 பரந்தன்–முல்லைத்தீவு பிரதான வீதியின் 12ஆம் கிலோமீற்றர் பகுதியில் அமைந்துள்ள புளியம்பொக்கனை முதலாவது பாலம் இன்று (28) பொதுமக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

40 மீற்றர் நீளமுடைய இந்தப் பாலத்தின் புனரமைப்புப் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் துரித நடவடிக்கையின் மூலம் ரூ.206 மில்லியன் செலவில் புனரமைப்புப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டதையடுத்து, வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாலத்தை இன்று உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு கையளித்தார்.

நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைப்பாளர் மருங்கன் மோகன், கண்டாவளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புனரமைப்புப் பணிகள் தாமதமான காலப்பகுதியில் இரண்டு உயிரிழப்புகள் மற்றும் பல வீதி விபத்துகள் பதிவாகியிருந்த நிலையில், பாலம் மீண்டும் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டமை அப்பகுதி மக்களால் வரவேற்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4