20 இலட்சம் கையூட்டல்: கம்பளையில் இருவர் கைது!

#SriLanka #Arrest #Lanka4 #Gampola #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
20 இலட்சம் கையூட்டல்: கம்பளையில் இருவர் கைது!

பேராதனை போதனா மருத்துவமனைக்கு 2027 ஆம் ஆண்டிற்கான உணவுப் பொருட்களை விநியோகிக்கும் டெண்டர் போட்டியில் இருந்து விலகுவதற்காக, 20 இலட்சம் லஞ்சம் பெற்ற இரண்டு சந்தேக நபர்களை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்துள்ளது.

குறிப்பிட்ட உணவு விநியோகக் ஒப்பந்தத்திற்கான டெண்டரில், தனது தந்தை மற்றும் மாமனார் பெயர்களில் விலைமனுக்களைச் சமர்ப்பிக்காமல் இருக்கவும், இதன்மூலம் போட்டித்தன்மையைத் தவிர்க்கவும் முதன்மைச் சந்தேக நபர் முறைப்பாட்டாளரிடம் முதலில் 30 இலட்சம் ரூபாய் லஞ்சம் கோரியுள்ளார். 

பின்னர் பேச்சுவார்த்தையின் முடிவில் இத்தொகை 25 இலட்சமாக குறைக்கப்பட்டு, இறுதியாக 20 இலட்சம் ரூபாயாகப் பேசப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று காலை கம்பளை அஞ்சல் நிலைய வாகனத் தரிப்பிடத்திற்கு அருகில் வைத்து 20 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டபோதும், அதற்கு உடந்தையாகச் செயல்பட்டபோதும் கம்பளையைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட இருவர் சுமார் 30 நிமிட இடைவெளியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4