புற்றுநோய் வழக்கு: 5.5 பில்லியன் இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் சம்மதம்!

#SriLanka #LANKA4 #cancer #Case #compensation #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
புற்றுநோய் வழக்கு: 5.5 பில்லியன் இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் சம்மதம்!

குழந்தைகளுக்கான பேபி பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட பல்லாயிரக்கணக்கான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர, ஜான்சன் & ஜான்சன் (Johnson & Johnson) நிறுவனம் 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள சுமார் 69,000 வழக்குகளில், 95 சதவீதத்திற்கும் அதிகமான மனுதாரர்கள் இந்த இழப்பீட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 

டால்க் அடிப்படையிலான பேபி பவுடரில் புற்றுநோயை உண்டாக்கும் துகள்கள் இருப்பதாகப் பல ஆண்டுகளாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. 

இருப்பினும், தனது தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும், அவை புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதற்கான அறிவியல் ஆதாரங்கள் இல்லை என்றும் அந்நிறுவனம் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது.

முன்னதாக, 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், 2023-ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியிலும் டால்க் அடிப்படையிலான பேபி பவுடர்களின் விற்பனையை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் முழுமையாக நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!