அரசாங்கத்தை குறை சொல்லாமல் நாட்டு மக்கள் சிக்கனமாக வாழ பழக வேண்டும் - வனவாசி ராகுல தேரர்!

#SriLanka #government #NPP #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
அரசாங்கத்தை குறை சொல்லாமல் நாட்டு மக்கள் சிக்கனமாக வாழ பழக வேண்டும் - வனவாசி ராகுல தேரர்!

அரசாங்கத்தை மட்டும் குற்றஞ்சாட்டாமல், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்களும் தங்களது நுகர்வைக் குறைத்து சிக்கனமாக வாழ பழக வேண்டும் என தேசிய நாமல் உயனவின் ஸ்தாபகர் வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரர் தெரிவித்துள்ளார். 

மக்கள் மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டணங்கள் குறித்துப் புலம்பினாலும், தேவையற்ற பயணங்களுக்காக பெருமளவில் எரிபொருளை வீணடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

 சுதந்திரத்திற்குப் பின் ஏழு தசாப்தங்களாக மக்கள் "இலவசமாகச் சாப்பிடுவதற்கே" பழகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மானியங்களை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு நாட்டை ஒருபோதும் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்றார். 

எனவே, தற்போதைய அரசின் 'அஸ்வசும' போன்ற நலத்திட்டங்களை 6 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகள் போன்ற குறுகிய காலத்திற்குள் மட்டுப்படுத்தி, அதன் பின்னர் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!