தேசிய நேர்மை வாரம் ஆரம்பமானது: அரசு உத்தியோகபூர்வ அறிவிப்பு!

#SriLanka #government #LANKA4 #Official #national #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
தேசிய நேர்மை வாரம் ஆரம்பமானது: அரசு உத்தியோகபூர்வ அறிவிப்பு!

“நேர்மையான கலாசாரம் – க்ளீன் ஸ்ரீலங்கா” எனும் தொனிப்பொருளின் கீழ், 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நேர்மை வாரம் இன்று (27) ஜூலை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்று காலை 9 மணிக்கு தேசிய நேர்மைப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டமை மற்றும் புதிய ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்தியமையுடன் இத்திட்டம் தொடங்கியது.

அரச சேவையில் ஊழலை ஒழித்து, வெளிப்படைத்தன்மையையும் திறனையும் அதிகரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதற்கமைய, ஜனாதிபதி செயலக வழிகாட்டலில் ஊழல் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் QR குறியீடு, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழி உட்பட பல்வேறு ஊடகங்கள் வாயிலாக முறைப்பாடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 31 வரை நாளாந்தம் வெவ்வேறு நேர்மை சார்ந்த தொனிப்பொருள்களில் விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இந்த நேர்மை மேம்பாட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 31 வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!