இலங்கையில் கடுமையான விலங்கு நலச் சட்டம்: சிறப்பு வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #Lanka4 #Gazette #Animal #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
இலங்கையில் கடுமையான விலங்கு நலச் சட்டம்: சிறப்பு வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் விலங்குகள் நலனைப் பாதுகாக்கவும், அவற்றுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்கவும் புதிய விலங்கு நலச் சட்ட வரைவு சிறப்பு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டத்தின் கீழ் விலங்குகளைத் தாக்குதல், துன்புறுத்துதல், பட்டினி போடுதல், சட்டவிரோதப் போட்டிகள் மற்றும் வேட்டையாடுதல் போன்ற செயல்கள் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

இக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 2,50,000 ரூபாய் வரை அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

அத்துடன், கொடூரமான முறையில் விலங்குகளைக் கொல்பவர்களுக்கு 5,00,000 ரூபாய் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்க சட்ட வரைவு பரிந்துரைக்கிறது.

மேலும், செல்லப்பிராணி விற்பனையகங்கள் மற்றும் இனப்பெருக்க மையங்களுக்கு உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதோடு, விலங்குகளைப் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்வோர் மீது 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4