ஈரான் மீதான குண்டுவீச்சு தாக்குதல்ளை 03 நாட்களாக இடைநிறுத்திய ட்ரம்ப்!! பின்னணி என்ன?

#SriLanka #Attack #Iran #Gulf #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #DonaldTrump
Thamilini
1 hour ago
ஈரான் மீதான குண்டுவீச்சு தாக்குதல்ளை 03 நாட்களாக இடைநிறுத்திய ட்ரம்ப்!! பின்னணி என்ன?

ஈரான் மீது கடந்த 13 நாட்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டிருந்த தாக்குதல்களை அமெரிக்கா திடீரென இடைநிறுத்தியுள்ளது. 

இறுதியாக கடந்த வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தாக்குதல்களும் முன்னெடுக்கப்படவில்லை. 

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ் (Mike Waltz), ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக டிரம்ப் அமெரிக்கத் தாக்குதல்களை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். 

"அவர் பேச்சுவார்த்தைகளுக்குச் சிறிது இடம் கொடுக்கிறார், அதற்குச் சிறிதளவு அவகாசம் அளிக்கிறார்," என்று மேலதிக விபரங்கள் எதுவும் இன்றி தெரிவித்திருந்தார். 

அதேநேரம் இது தொடர்பில் கருத்து வெளியட்டுள்ள ஈரானிய வட்டாரம் ஒன்று, தெஹ்ரான் பதிலுக்குகு பதில் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும், அமெரிக்கா தாக்குதல்களை நிறுத்தினால் ஈரானும் தாக்குதல்களை நிறுத்திக்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும்தாக்குதல்களை இடைநிறுத்துவதற்கான ட்ரம்பின் முடிவு, அமெரிக்காவின் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டில் ஒரு பெரிய மாற்றத்தைக் குறிக்கிறது என்று தெஹ்ரான் அதிக நம்பிக்கை கொள்ளவில்லை எனவும் ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4