அனைத்து பயணிகள் பேருந்துகளும் தரப் பரிசோதனைக்கு உட்டுபடுத்தப்பட வேண்டும்!!

#SriLanka #Bus #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
அனைத்து பயணிகள் பேருந்துகளும் தரப் பரிசோதனைக்கு உட்டுபடுத்தப்பட வேண்டும்!!

அனைத்து பயணிகள் பேருந்துகளும் 5,000 கிலோமீட்டர் ஓடிய பிறகு தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர்  மஞ்சுலா குலரத்ன தெரிவித்துள்ளார். 

 சாலை விபத்துக்களைக் குறைக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

 இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டதாகவும், தரப் பரிசோதனைக்காக தகுந்த அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். 

 கடந்த காலத்தில் நாட்டில் நிகழ்ந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம் ஓட்டுநர்களின் அலட்சியமும், வாகனங்களில் உள்ள குறைபாடுகளுமே என்று தலைவர் சுட்டிக்காட்டினார். 

 அதன்படி, வாகனங்களின் நிலையை ஆய்வு செய்ய அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பிறகு, இந்தச் சட்டம் மூன்று மாதங்களுக்கு பேருந்துகளுக்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் அனைத்து வாகனங்களுக்கும் செயல்படுத்தப்படும் என்று தேசிய சாலைப் பாதுகாப்பு சபையின் தலைவர் வலியுறுத்தினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!