இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் துப்பாக்கி கலாச்சாரம் - பெல்லன்விலவில் ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Investigation
#Crime
#GunShoot
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
பெல்லன்வில பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் படுகாயம் அடைந்த நிலையில், களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டப்பின் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆழமான காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இலங்கையில் நாளுக்கு நாள் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 14 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.