உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்காக கோரிக்கை விடுத்த நாமல் ராஜபக்ஷ

#SriLanka #government #Namal Rajapaksha #LANKA4 #AnuraKumaraDissanayake #Bike #L4
Prasu
1 month ago
உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்காக கோரிக்கை விடுத்த நாமல் ராஜபக்ஷ

இலங்கையில் 1200cc வரையிலான உயர் திறன் (High Capacity) கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். 

நாட்டின் விளையாட்டுச் சுற்றுலா (Sports Tourism) மற்றும் மோட்டார் விளையாட்டுத் துறையை (Motorsports) மேம்படுத்துவதற்கு இவ்வாறான மோட்டார் சைக்கிள்களுக்கான அனுமதி மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இவற்றைச் பதிவு செய்ய அனுமதிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும், இளைஞர்களின் நீண்டகால எதிர்பார்ப்புகள் இதன் மூலம் பூர்த்தியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!