கிளிநொச்சியில் காவல்துறை அதிரடி: வானத்தை நோக்கிச் சூடு – 9 பேர் கைது!

#SriLanka #ARREST #Police #Kilinochchi #Hospital #people #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY
Abi
1 month ago
கிளிநொச்சியில் காவல்துறை அதிரடி: வானத்தை நோக்கிச் சூடு – 9 பேர் கைது!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அழிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, விசேட அதிரடிப்படை அதிகாரிகள் வானத்தை நோக்கி எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை வெளியிட்ட விசேட அறிக்கையின்படி, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது ஏற்பட்ட மோதலில் காயமடைந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் நால்வர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரும் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!