பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த நடிகர் சூர்யா
பிரபல நடிகர் சூர்யா இன்று தனது 51வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
இந்த நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த ஜூன் மாதம் 20ம் திகதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களது போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் திரை பிரபலங்களிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தனது பிறந்தநாளை எந்த விதத்திலும் கொண்டாட வேண்டாம் என ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுகுறித்து சூர்யா தரப்பிலோ, அவரது ரசிகர் மன்றம் தரப்பிலோ எந்த அறிக்கைகளும் வெளியாகவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே