செங்கடலில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதல் - 100 டொலரை எட்டும் கச்சா எண்ணெய்
#SriLanka
#prices
#Oil
#RedSea
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
யேமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாகக் கூறியதைத் தொடர்ந்து எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
இதன்காரணமாக இன்றைய தினம் கச்சா எண்ணெய் விலைகள் 100 டொலரை எட்டியுள்ளன.
இன்றைய நிலவரப்படி, பிரென்ட் கச்சா எண்ணெயின் ஒரு பேரலின் விலை, 98 அமெரிக்க டாலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது.
இது கடந்த ஆறு வாரங்களில் பதிவான மிக உயர்ந்த விலை மதிப்பாகும். WTI ஒரு பேரலின் விலையும் 90 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது.
இதற்கிடையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆசிய சந்தையையும் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.