கிளிநொச்சியில் விசேட சோதனை: 6.5 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை

#SriLanka #Police #Kilinochchi #Investigation #Lanka4 #Raid #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
8 hours ago
கிளிநொச்சியில் விசேட சோதனை: 6.5 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை

கல்லாறில் மக்களின் ஒத்துழைப்புடன் 6.5 கிலோ கஞ்சா பறிமுதல் – தர்மபுரம் பொலிஸார் தீவிர விசாரணை! கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீரவி கிராம அலுவலர் பிரிவின் கல்லாறு பகுதியில், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பெரும் கஞ்சா கடத்தல் சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.

கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் நேற்றிரவு 9.30 மணியளவில் சந்தேக நபர்கள் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பொதிகளை, சம்பவ இடத்திற்கு விரைந்த தர்மபுரம் பொலிஸார் மீட்டனர்.

தொடர்ந்து தேவாலயப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட உரப்பை ஒன்றில் இருந்து 3 பொட்டலங்களாகப் பொதி செய்யப்பட்ட 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அத்துடன், சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், தப்பிச் சென்றவர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4