பிரபல நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை விதிப்பு

#Court Order #Actor #TamilCinema #Prison #Director #Lanka4 #Fraud #L4
Prasu
2 hours ago
பிரபல நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை விதிப்பு

செக் மோசடி வழக்கில் சிக்கிய பிரபல நடிகர் விமலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

‘மன்னர் வகையறா’ திரைப்படத்திற்கு 4.5 கோடி கடனாக பெற்று திருப்பி தராததால் இந்த தீர்ப்பு வழங்ப்பட்டுள்ளது.

மன்னர் வகையறா வெளியான பின்னரும் அந்தத் தொகையை அவர் வழங்கவில்லை. பின்னர், அந்த தொகையை விமல் காசோலையாக வழங்கியுள்ளார். 

இந்த காசோலையை தயாரிப்பாளர் கோபி வங்கியில் செலுத்திய போது, கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. 

இதையடுத்து 4.5 கோடி செக் மோசடி குறித்து நடிகர் விமல் மீது கோபி சென்னையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதித்து வாங்கிய தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் விமல், தண்டனையை நிறுத்தி வைக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4