வயல்களுக்கு தீ வைப்பதைத் தவிர்க்கவும்: கிளிநொச்சி விவசாயக் கூட்டத்தில் அரச அதிபர் முரளிதரன் கோரிக்கை!

#SriLanka #Meeting #Kilinochchi #government #LANKA4 #Agriculture #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
வயல்களுக்கு தீ வைப்பதைத் தவிர்க்கவும்: கிளிநொச்சி விவசாயக் கூட்டத்தில் அரச அதிபர் முரளிதரன் கோரிக்கை!

கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில் விவசாயத் துறை சார்ந்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. 

எதிர்வரும் பெரும்போக நெற்செய்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்தும், எல்நினோ காலநிலை தாக்கத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.

தற்பொழுது சிறுபோக அறுவடை நடைபெற்று வரும் நிலையில், அறுவடை முடிந்த வயல்களை உடனடியாகத் தீயிட்டு எரிப்பதைத் தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

அறுவடைக்குப் பிந்தைய வைக்கோல் ஒரு மாத காலத்திற்கு கால்நடைகளின் மேய்ச்சலுக்கும் வாழ்வாதாரத்திற்கும் பயன்படும் என்பதால், தீ வைப்பதாக இருந்தால் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆலோசனையைப் பெற்றே செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள், யாழ். பல்கலைக்கழக விவசாய பீட விரிவுரையாளர்கள், கமநல அபிவிருத்தி மற்றும் மாகாண விவசாயத் திணைக்கள அதிகாரிகள், விவசாய சம்மேளனப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!