ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாகவும் பொருளாதார மையங்களாகவும் மாற்றப்படும்: பிரதமர் ஹரிணி!

#SriLanka #PrimeMinister #Lanka4 #President #Economic #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 hour ago
ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாகவும் பொருளாதார மையங்களாகவும் மாற்றப்படும்: பிரதமர் ஹரிணி!

நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனைய இல்லங்கள் பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்குச் பதிலளித்துப் பேசுகையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டு மற்றும் 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் மட்டும், நாட்டிலுள்ள எட்டு ஜனாதிபதி இல்லங்களைப் பராமரிப்பதற்காக 13.9 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அரசின் திட்டம்: இந்த ஜனாதிபதி மாளிகைகள் பொருளாதார ரீதியில் நாட்டிற்குப் பயனுள்ள திட்டங்களுக்கு மாற்றப்படும் வரை, அவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் இடைக்காலப் பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4