குட்டிமணி, தங்கத்துரை சிலை திறப்புக்கு ஆகஸ்ட் 4 வரை இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு!

#SriLanka #LANKA4 #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
குட்டிமணி, தங்கத்துரை சிலை திறப்புக்கு ஆகஸ்ட் 4 வரை இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவு!

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையில் உயிரிழந்த அமரர்களான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் 43-வது நினைவு தினமான எதிர்வரும் ஜூலை 25 அன்று அவர்களின் திருவுருவச் சிலைகளை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சிலை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான சதீஷ் என்பவரை வல்வெட்டித்துறை பொலிஸார் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பெற்றதோடு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வழக்கின் விசாரணை இன்று மீண்டும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சிரேஷ்ட சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த கௌரவ நீதவான், எதிர்வரும் ஆகஸ்ட் 04 ஆம் திகதி வரை குறித்த இடத்தில் சிலை நிறுவுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!