செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: சர்வதேச விசாரணை கோரி செம்மணியில் கவனயீர்ப்பு போராட்டம்!
#SriLanka
#Protest
#Investigation
#International
#ADDA
#ADDAADS
#SHELVA
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
2 months ago
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனிதப்புதைகுழி பகுதியை பார்வையிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறப்பு பிரதிநிதிகள் குழு வருகை தந்திருந்தனர்.
அவர்களின் கவனத்தை ஈர்க்கும் முகமாகவே செம்மணி வளைவுப் பகுதியில் இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இப்போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சர்வதேச நீதியை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.