பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பாதுகாப்பு அரணில் ஊடுருவல் மூவர் பொலிஸாரால் கைது!

#SriLanka #PrimeMinister #ARREST #Police #Security #ADDA #Harini Amarasooriya #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பாதுகாப்பு அரணில் ஊடுருவல் மூவர் பொலிஸாரால் கைது!

கொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய வருகை தந்திருந்த போது, அவரைத் தொலைநோக்கி வழியே உற்றுநோக்கியதாகக் கூறப்படும் மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரையும் கொம்பனித்தெரு பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

வழக்கை விசாரணை செய்த நீதவான் பசன் அமரசேன, சந்தேகநபர்கள் மூவரையும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதோடு, சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கையை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்குக் கட்டளையிட்டார்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது.

கிண்ணியா மற்றும் மொல்லிப்பத்தானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், கொழும்பில் பணிபுரிந்து வருவதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!