சிறைச்சாலை கட்டமைப்பு மேம்பாடு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

#SriLanka #Prison #Development #LANKA4 #President #AnuraKumaraDissanayake #ADDA #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
சிறைச்சாலை கட்டமைப்பு மேம்பாடு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

நாட்டின் சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது நிலவும் பிரச்சினைகள், அவற்றுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் மற்றும் சிறைச்சாலை வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு, சிறைச்சாலை அமைப்பில் காணப்படும் சவால்கள் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடைமுறைத் தீர்வுகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.

மேலும், சிறைச்சாலைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கொள்ளளவை அதிகரித்தல் மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான பல்வேறு பரிந்துரைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும், சிறைச்சாலை நிர்வாகத்தை மேலும் திறன் மிக்கதாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!