நாட்டின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
நாட்டின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (20) பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

 பிற்பகல் 2.00 மணிக்கு மேல் அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அத்துறை குறிப்பிட்டுள்ளது. 

 அதேநேரம் நாட்டின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும்,  . மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், மற்றும் இரத்தினபுர, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணிக்கு சுமார் 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அத்துறை வலியுறுத்துகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!