அனுமதி பத்திரம் இன்றி தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் 1000 பேருந்துகள்

#SriLanka #Bus #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
அனுமதி பத்திரம் இன்றி தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவையை வழங்கும் 1000 பேருந்துகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முறையான வீதி அனுமதிப் பத்திரம் இன்றி சுமார் 1000 பேருந்துகள் சட்டவிரோதமான முறையில் தூர இடங்களுக்கான சேவையில் ஈடுபடுவதாக  இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னதெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  இவ்வாறான பேருந்து இயக்கத்தினால் முறையான அனுமதிப் பத்திரங்களை பெற்று சட்டப்பூர்வமாகச் சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படுவதுடன், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் சாதாரண பொதுமக்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார். 

மேலும், பெருந்தொகை முதலீடுகளைக் கொண்ட தனியார் பேருந்து நிறுவனங்கள் ஒரே அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி பல சேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றன.  இது தொடர்பில்  தேசிய போக்குவரத்து ஆணைக்குழு    அவதானம் செலுத்தாமல் உள்ளது” எனவும் விமர்சித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!