முட்டைகளின் விலை அதிகரிப்பு!

#SriLanka #prices #Egg #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
முட்டைகளின் விலை அதிகரிப்பு!

முட்டைகளின் விலையை இன்று முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் அதிகரிக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

குளியாப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், முட்டை விலை அதிகரிப்புக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுமே நேரடிப் பொறுப்பாளிகள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

 சோளத்திற்குப் பதிலாக அரிசி உள்ளிட்ட பல்வேறு மாற்றீடுகளைப் பயன்படுத்துவதால் விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் சமிபாட்டுத் தொகுதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் முட்டை உற்பத்தி 20 முதல் 30 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 அத்துடன், சில மோசடி வியாபாரிகள் விலங்கு உணவுகளில் பல்வேறு இரசாயனங்கள் மற்றும் மருந்துகளைக் கலப்பதன் காரணமாக பெருமளவிலான கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் சுட்டிகக்காட்டினார். 

 இந்த நிலைமையினால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், தினசரி முட்டை உற்பத்தியும் கணிசமாகக் குறைந்துள்ளதாக கூறிய அவர்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைகள் குறித்து அறிந்திருந்த போதிலும், இதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை எனவும்  தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!