நீர்ப்பாசன வரலாற்றில் புதிய சாதனை! தெற்காசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை இலங்கையில் இன்று திறப்பு!
நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்! தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.!! இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றில் இன்று (ஜூலை 15, 2026) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது .
சுமார் 60 ஆண்டு காலக் கனவான மகாவலி பெருந்திட்டத்தின் கீழ், தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை இன்று வெற்றிகரமாக இணைக்கப்பட்டு (Tunnel Breakthrough) மக்கள் பார்வைக்குத் திறக்கப்படுவது மிக முக்கியமானதொரு நிகழ்வாகும்.
இந்த மாபெரும் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் இதனால் மக்களுக்குக் கிடைக்கப்போகும் நன்மைகள் , சுரங்கப்பாதையின் நீளம்: 27.7 கிலோமீட்டர் (தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை) முக்கிய திட்டம்:
வட மத்திய கால்வாய்த் திட்டம் (மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் கீழ்) நிதியுதவி: ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மகாமீகஸ்வேவ மற்றும் கொதுருவாவ ஆகிய இரு வேறு முனைகளிலிருந்து நவீன சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் (TBM) மூலம் தோண்டப்பட்டு, இன்று நிலத்தடியில் துல்லியமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
பெரும்போகம் மற்றும் சிறுபோகம் ஆகிய இரு போக விளைச்சல்களுக்காக 74,000 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்குத் தங்குதடையின்றி இந்த மூலம் தண்ணீர் வழங்கப்படும்.
240 கி.மீ நீளமுள்ள வட மத்திய கால்வாய் வழியாக 12 முக்கிய நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் 1,505 குளங்களுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படும். நேரடியாக 25,000 விவசாயக் குடும்பங்கள் இதன் மூலம் வாழ்வாதார நன்மை அடைவர்.
வடமத்திய மாகாணம் பகுதியில் பல தசாப்தங்களாகக் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மாசுபட்ட நீரால் நிலவி வரும் தீராத சிறுநீரக நோய்ப் பிரச்சினைக்கு இத்திட்டம் ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.
ஆண்டுக்கு 70 மில்லியன் கன மீட்டர் சுத்தமான குடிநீர் இந்த அமைப்பின் மூலம் விநியோகிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 1.5 மில்லியன் மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இலங்கையின் உலர் வலய விவசாயிகளின் வாழ்விலும், ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்திலும் இந்த நீர் விநியோகக் கட்டமைப்பு ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை!
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே