கட்டார் முன்னாள் அமீரின் மறைவு: கொழும்பிலுள்ள தூதரகத்திற்கு பணிப்பாளர் நவாஸ் நேரில் விஜயம் செய்து இரங்கல்

#SriLanka #Colombo #Director #LANKA4 #Embassy #Qatar #ADDA #ADDAADS #SHELVA #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 months ago
கட்டார் முன்னாள் அமீரின் மறைவு: கொழும்பிலுள்ள தூதரகத்திற்கு பணிப்பாளர் நவாஸ் நேரில் விஜயம் செய்து இரங்கல்

கட்டார் முன்னாள் அமீரின் மறைவிற்கு அனுதாபம் தெரிவிக்க, முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் நவாஸ் தூதரகத்திற்கு விஜயம் கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷெய்க் ஹமத் பின் கலீஃபா ஆல்-தானி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக, இன்று (15) கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்திற்கு முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எப்.எஸ்.எம். நவாஸ் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, தூதரகத்தின் பொறுப்பதிகாரியான அலீ பின் சாலிம் அல்-நுஐமியைச் சந்தித்து, தனது அனுதாபத்தைத் தெரிவித்தார். தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டில் தமது இரங்கல் செய்தியைப் பதிவு செய்தார். மேதகு ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்கள் கத்தார் நாட்டின் எமிர் (அமீர்) — அல்லாஹ் அவரைப் பாதுகாத்து நல்வாழ்வு அளிப்பானாக. 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். மிக ஆழமான துயரத்தோடும் மன வருத்தத்தோடும், அதே வேளையில் அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் விதியின் மீது முழுமையாக திருப்தி கொண்ட உள்ளங்களோடும், தங்களின் தந்தையாரும் மேதகு தந்தையார் எமருமான ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி அவர்களின் மறைவுச் செய்தியை நாங்கள் அறிந்தோம். ​

இந்தப் பேரிழப்பில் உங்களுடனும், சகோதரத்துவமிக்க கட்டார் நாட்டு மக்களுடனும் நாங்களும் பங்கெடுத்துக் கொள்ளும் அதே வேளையில், உங்களுக்கும், கௌரவமிக்க ஆளும் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், மனமார்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். ​

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் மீது தனது பேரருளையும் கருணையையும் பொழிய வேண்டும் என்றும், உண்மையாளர்களுடனும் நல்லடியார்களுடனும் அவனது விசாலமான சுவனப் பொதியில் (சொர்க்கத்தில்) அவருக்கு உயரிய இடத்தை நல்க வேண்டும் என்றும், உங்களுக்கு அழகிய பொறுமையையும் மன அமைதியையும் வழங்க வேண்டும் என்றும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

(நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள், மேலும் நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்பவர்களாவோம்) இவ்விஜயத்தின் போது முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் முப்தி முர்ஷியும் இணைந்து கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!