ஓமான் கடல் பகுதியில் இந்திய பிரஜை கொலை - இந்திய அரசு கண்டனம்
#Death
#Attack
#Iran
#Oman
#Ambassador
#Indian
#condemn
#Sea
Prasu
7 hours ago
ஓமான் கடல் பகுதியில் இந்திய பிரஜையொருவர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஈரானின் துணைத் தூதரான முகமது ஜவாத் ஹொசைனியை நேரில் அழைத்து, இந்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
எண்ணெய் டாங்கர்கள்மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யவே இந்தத் தூதர் நேரில் வரவழைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.
ஓமான் கடல் பகுதியில் ஈரானிய குரூஸ் ஏவுகணையால் தாக்கப்பட்ட எண்ணெய் டாங்கர் ஒன்றில், உயிரிழந்த இந்திய மாலுமி பணியாளராக இருந்துள்ளார்.
இத்தாக்குதலில் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஆறு பேர் இந்தியப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே