பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பகுதிகளில் போலி போலீஸ் மோசடி

#Police #SWITZERLAND #LANKA4 #Warning #money #Fraud #Fake #L4
Prasu
3 months ago
பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பகுதிகளில் போலி போலீஸ் மோசடி
பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் பகுதிகளில் மட்டும், கடந்த 4 ஆண்டுகளில் 5,000க்கும் மேற்பட்டோர் போலி போலீஸ் கும்பல்களால் ஏமாற்றப்பட்டுள்ளனர். மொத்த இழப்பு சுமார் 1.8 கோடி சுவிஸ் பிராங்குகள் (18 million CHF) என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த மோசடிகளில் குற்றவாளிகள் தொலைபேசியில் தங்களை போலீஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்தி உங்கள் வங்கி கணக்கில் பிரச்சனை உள்ளது என்று தெரிவிக்கின்றனர். 
  • பின்னர் பணம், வங்கி அட்டை அல்லது நகைகளை எடுத்துச் செல்ல வீட்டிற்கு ஒருவரை அனுப்புகின்றனர். 
  • பெரும்பாலும் வயதானவர்கள் இலக்காகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

சுவிஸ் போலீஸ் எச்சரிக்கை:

  • போலீஸ் ஒருபோதும் தொலைபேசியில் உங்கள் வங்கி விவரங்களை கேட்காது.
  • வீட்டிற்கு வந்து பணம், வங்கி அட்டை, நகை வாங்க மாட்டார்கள்.
  • யாராவது அழுத்தம் கொடுத்தால் உடனே அழைப்பை நிறுத்துங்கள்.
  • சந்தேகம் இருந்தால் 117 (சுவிஸ் போலீஸ் அவசர எண்) அழைக்கவும். 

குறிப்பாக பேர்ன், சூரிச் போன்ற ஜெர்மன் மொழி பேசும் பகுதிகளிலும் இந்த வகை மோசடிகள் பதிவாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!