நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - மீளாத்துயரில் உயிரிழந்த சிறைச்சாலை பாதுகாவலர் டிலான் ஸ்ரீ அபேவர்தனவின் மனைவி
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை பாதுகாவலர் டிலான் ஸ்ரீ அபேவர்தனவின் மனைவி திலினி தேவிகா, தனது கணவரின் இழப்பால் மீளாத்துயரில் கதறி வருகிறார்.
"இன்று என்னால் வீட்டிற்கு வர முடியாது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் பெரிய கலவரம் நடக்கிறது; அதனால் நான் அங்கு செல்கிறேன். போனை ஆஃப் செய்யாதீர்கள், நான் அங்கு சென்றவுடன் பேசுகிறேன் என்று கடைசியாக என்னிடம் கூறினார்.
அதன்பின் அவர் என்னுடன் பேசவில்லை. அதிகாலையில் சிறைச்சாலையில் கைதிகள் தாக்கியதில் சில அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. பின்னர், உயிரிழந்தவர்களின் பட்டியலில் எனது கணவரின் பெயரையும் பார்த்தேன்" என்று திலினி தேவிகா கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், "குற்றவாளிகள் ஒன்றிணைந்து, தவறு செய்யாத அதிகாரிகள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தி, சித்திரவதை செய்து கொன்றுள்ளனர்.
அவர்களது உடல்களைப் பார்த்தபோது, அவர்கள் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை. எனது கணவர் ஒரு வீரன்; எனது பிள்ளைகளுக்குத் தந்தையை இழந்துவிட்டேன். தந்தையில்லாத பிள்ளைகளையும், கணவரை இழந்த வாழ்க்கையையும் எதிர்கொள்வது ஒரு பெரிய சவாலாகும்.
அந்தச் சவாலை என் கணவருக்காக நான் ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு இடமாற்றம் கிடைக்காததால், கடந்த 11 ஆண்டுகளாக வேலை முடிந்து பண்டாரவளைக்கு வந்து பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வார்.
அன்று காலை கூட எனக்கு போனில் பிள்ளைகளைக் காட்டச் சொன்னார்" என உருக்கமாகக் கூறினார்.
இவரது தாயார் ஏ.எம்.எஸ். தமயந்தி பெரேரா, மகன் இறந்ததற்காக நான் கவலைப்படவில்லை; தவறு செய்யாத எனது மகனை இப்படிப் படுகொலை செய்ததைக் கண்டுதான் நான் வருந்துகிறேன்" என்று கண்ணீர் மல்கக் கூறினர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே