எல் நினோ காலநிலை – கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

#SriLanka #Kilinochchi #LANKA4 #Warning #heat #Climate #L4
Prasu
2 months ago
எல் நினோ காலநிலை – கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனங்களின் தற்போதைய தகவல்களின்படி, எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வின் ஆரம்ப நிலை உருவாகி வருகிறது. 

இதன் தாக்கம் உலகின் பல நாடுகளைப் போலவே இலங்கையின் காலநிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. சில இடங்களில் இடைக்கிடையாக சிறிய அளவிலான மழை பெய்ய வாய்ப்பு எதிர்வரும் நாட்களிலீருந்தாலும், அதிக வெப்பநிலை காரணமாக குளங்கள், ஏரிகள் மற்றும் பிற மேற்பரப்பு நீர்நிலைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 

இதன் தாக்கமாக நிலத்தடி நீர்மட்டமும் படிப்படியாகக் குறையக்கூடும். எனவே, அனைவரும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது இன்றியமையாதது.

  • வீட்டில் தேவைக்கேற்ப மட்டுமே நீரைப் பயன்படுத்துங்கள்.
  • விவசாயத்திற்கு நீரை திறமையாக பயன்படுத்துங்கள்.
  • தேவையற்ற நீர் வீணாவதைத் தவிர்க்குங்கள்.

வெப்பநிலை அதிகரிக்கும் காலங்களில் நீர் ஆவியாகும் அளவும் அதிகரிக்கும். சில நேரங்களில் திடீரென மேகமூட்டம் உருவாகி, குறிப்பாக காடுகள் மற்றும் நீர்நிலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பும் காணப்படலாம். 

எனவே, கருமேகங்கள் சூழும் போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கான சில முன்னெச்சரிக்கைகள்:

  • நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.
  • அதிக வெப்ப நேரங்களில் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்குங்கள்.
  • போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  • வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கவனியுங்கள். 
  • திடீர் இடியுடன் கூடிய மழை அல்லது பலத்த காற்று ஏற்பட்டால் பாதுகாப்பான இடத்தில் தங்குங்கள்.

எல் நினோவின் முழுமையான தாக்கம் அடுத்த மாதங்களில் தெளிவாகப் புரியவரலாம். எனவே, இப்போதே முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் முக்கியமானது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!