பல தடங்களை தாண்டி ‘ஏ’ சான்றிதழ் பெற்ற தமிழக முதல்வரின் ஜனநாயகன் திரைப்படம்

#Tamil Nadu #TamilCinema #LANKA4 #release #Vijay #ChiefMinister #Movie #L4
Prasu
3 months ago
பல தடங்களை தாண்டி ‘ஏ’ சான்றிதழ் பெற்ற தமிழக முதல்வரின் ஜனநாயகன் திரைப்படம்

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. 

படத்தின் வெளியீட்டு திகதி குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்திருந்தாலும், இதுவரை படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. 

இதன் காரணமாக அதிகாரப்பூர்வ வெளியீட்டு திகதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. முன்னதாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்சார் நடைமுறைகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், தணிக்கை வாரியம் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம், 3 மணிநேரம் 3 நிமிடங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். 

படத்தில் ஆட்சேபனையான காட்சிகள் இருப்பதாக சான்றிதழ் வழங்க தாமதப்படுத்திய தணிக்கை வாரியம், எந்தெந்த காட்சிகளை நீக்கியது உள்ளிட்ட தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போது சென்சார் கிடைத்ததை அடுத்து. வரும் 24ம் திகதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எனவே, விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!