நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் : அறிக்கை கோருகிறார் நீதியமைச்சர்!
#SriLanka
#Prison
#Negombo
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
#Harshana Nanayakkara
Thamilini
2 months ago
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார சிறைச்சாலை திணைக்களத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளனர். 38 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
அவர்களில் 10 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன.
படுகாயம் அடைந்த இருவர் மேலதிக சிசிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பரிமாற்றம் தொடர்பில் இடம்பெற்ற முரண்பாடே மேற்படி கலவரத்துக்கு காரணம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.