மிகக் குறைந்த விலையில் காற்றாலை மின்சாரம்!​ திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த காற்றாடிகள்!

#SriLanka #Mannar #Trincomalee #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
மிகக் குறைந்த விலையில் காற்றாலை மின்சாரம்!​ திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த காற்றாடிகள்!

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னார் 50 MW HayWind காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான இறுதித் தொகுதி காற்றாடிகள் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

 இத்திட்டம் 2027 மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு, 50 MW கொள்ளளவு கொண்ட பசுமை மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ளது. ​

இலங்கை வரலாற்றிலேயே மிகக் குறைந்த விலையாக, இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு யூனிட் மின்சாரத்தை வெறும் 0.0465 அமெரிக்க டொலர் (சுமார் 14.37 இலங்கை ரூபா) என்ற விலைக்கு கொள்வனவு செய்ய உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. ​

இந்த மின் உற்பத்தி நிலையம் செயல்பாட்டுக்கு வரும்போது, நாட்டின் எரிபொருள் இறக்குமதி பெருமளவில் குறைக்கப்படும். இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 4.7 பில்லியன் ரூபா அளவிலான வெளிநாட்டு நாணயத்தை நாட்டிற்குச் சேமிக்க வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!