தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

#SriLanka #Accident #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA #Nalinda Jayatissa
Thamilini
2 months ago
தேசிய விபத்துத் தடுப்பு வாரம்  இன்று முதல் ஆரம்பம்!

பொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று (06.07) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இந்த விழிப்புணர்வு வேலை திட்டத்தை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆரம்பித்து வைக்கவுள்ளார். 

விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் ஆயிரக்கணக்கான  உயிர்கள் பறிபோவதையும், இலட்சக்கணக்கான மக்கள் காயங்கள் மற்றும் ஊனமுறுவதையும் கருத்திற்கொண்டு, இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுகாதார சேவைக்கு மட்டுமன்றி, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கும் விபத்துக்களினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!