பாகிஸ்தானில் 72 பேர் உயிரிழந்த வணிக வளாகத் தீ விபத்தில் குற்றாளியாக பெயரிடப்பட்ட 11 வயது சிறுவன்

#Death #people #Pakistan #LANKA4 #fire #L4
Prasu
2 months ago
பாகிஸ்தானில் 72 பேர் உயிரிழந்த வணிக வளாகத் தீ விபத்தில் குற்றாளியாக பெயரிடப்பட்ட 11 வயது சிறுவன்

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 72 பேர் உயிரிழந்தது தொடர்பாக, காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 11 வயது சிறுவன் ஒருவன் குற்றவாளியாகப் பெயரிட்டுள்ளார்.

ஜனவரி 17 அன்று, கராச்சியின் புகழ்பெற்ற எம்.ஏ. ஜின்னா சாலையில் உள்ள வர்த்தகப் பகுதியான சத்தார் பகுதியில் அமைந்துள்ள குல் பிளாசா வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், தீ விபத்து ஏற்பட்டதிலிருந்து தலைமறைவாக உள்ள சிறுவனின் தந்தை மற்றும் மேலும் நான்கு பேர் குற்றவாளியாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

அரசுத் தரப்பு சாட்சிகளின்படி, அந்தச் சிறுவன் தனது தந்தை இல்லாத நேரத்தில் வணிக வளாகத்தில் ஒரு செயற்கைப் பூக்கடையை நடத்தி வந்தான். மேலும், தீக்குச்சிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது தீயை மூட்டியதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ள மற்றவர்களுடன் அந்தச் சிறுவனும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவான் என்று மாவட்ட அரசு வழக்கறிஞர் அப்துல் ரசாக் குஜ்ஜார் குறிப்பிட்டுள்ளார். 

மற்ற குற்றவாளிகளில் வணிக வளாகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான தன்வீர் பாஸ்தா, அமர் இஸ்மாயில், முகமது ரமலான் மற்றும் முகமது அமீன் ஆகியோர் அடங்குவர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!