ஈரானின் முன்னாள் உச்ச தலைவரின் இறுதி சடங்கில் பங்கேற்க தெஹ்ரான் சென்றுள்ள ரவூப் ஹக்கீம்

#SriLanka #Death #Rauff Hakeem #LANKA4 #Iran #Visit #leader #L4
Prasu
2 months ago
ஈரானின் முன்னாள் உச்ச தலைவரின் இறுதி சடங்கில் பங்கேற்க தெஹ்ரான் சென்றுள்ள ரவூப் ஹக்கீம்
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மற்றும் இலங்கையின் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெஹ்ரான் சென்றுள்ளனர்.

ஈரான் அரசாங்கத்தின் அழைப்பை தொடர்ந்தே ரவூப் ஹக்கீம் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

கடந்த பெப்ரவரி 28ம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய வான் வழித் தாக்குதலின் போது கமேனி படுகொலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் கடுமையான போர் இடம்பெற்றதால் அவரது இறுதி சடங்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த இறுதி சடங்குகள் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!