இலங்கையில் இரு வேறு குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது
#SriLanka
#Arrest
#Kilinochchi
#Lanka4
#illegal
#L4
Prasu
1 hour ago
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இன்று 29.06.2026 அதிகாலை பொலிசார் வீதிச் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, விசுவமடு பகுதியிலிருந்து அனுமதி இன்றி மரங்களை வெட்டி யாழ்ப்பாணம் கொண்டு சென்ற இரண்டு கப்ரக வாகனம் பொலிசாரின் வீதிச் சோதனையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, புளியம்பொக்கனை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றி பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றினனையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளதுடன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களையும், தடயப் பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே