பிற்பகல் 02.00 மணிக்கு பிறகு மாறும் வானிலை - அநேகமான இடங்களில் கொட்டித் தீர்க்கும் மழை!

#SriLanka #weather #Rain #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
பிற்பகல் 02.00 மணிக்கு பிறகு மாறும் வானிலை - அநேகமான இடங்களில் கொட்டித் தீர்க்கும் மழை!

மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்  அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

திணைக்களம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதற்கமைய நாட்டின் சில பகுதிகளில்  50 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும்,   ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகளிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும் என அது மேலும் கூறியுள்ளது. 

 இடியுடன் கூடிய மழையின் போது, ​​தற்காலிகமாக குறிப்பிட்ட பகுதிகளில் வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!