நாகப்பட்டினம் துறைமுகத்தில் சுங்கவரி இல்லாத வர்த்தக வசதிகள் அறிமுகம்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 months ago
நாகப்பட்டினம் துறைமுகத்தில்  சுங்கவரி இல்லாத வர்த்தக வசதிகள் அறிமுகம்!
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவைகளை வலுப்படுத்தும் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைந்துள்ள சர்வதேச பயணிகள் முனையத்தில் சுங்கவரி இல்லாத வர்த்தக வசதிகளை அறிமுகப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா-இலங்கை கப்பல் வழித்தடத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

துறைமுகத்தில் பயணிகளின் அனுபவத்தை ஒரு சர்வதேச விமான நிலையம் மற்றும் சர்வதேச கடல்சார் முனையத்தின் தரத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். 

தமிழ்நாடு கடல்சார் சபையால் (TNMB) உருவாக்கப்பட்ட இந்த முனையம், நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையே பயணிகள் படகு சேவைகளை எளிதாக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!