அயர்லாந்து அணியிடம் படுதோல்வி அடைந்த பிரபல இந்திய அணி

#India #LANKA4 #T20 #Cricket #Ireland #L4
Prasu
3 months ago
அயர்லாந்து அணியிடம் படுதோல்வி அடைந்த பிரபல இந்திய அணி

இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து சென்றுள்ளது. அந்தவகையில், முதல் போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. 

இதில் நாணய சுழற்சியை வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய அயர்லாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.

அயர்லாந்து அணி சார்பில், லார்கன் டக்கர் 50 ஓட்டங்களும் டெலானி 49 ஓட்டங்களும் குவித்தனர்.

பந்துவீச்சில், ஹர்சித் ராணா 3 விக்கெட்டும் அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில், 184 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.5 ஓவரில் 148 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பில், அபிஷேக் சர்மா 50 ஓட்டங்களும் திலக் வர்மா 19 ஓட்டங்களும் குவித்தனர்.

இறுதியில், அயர்லாந்து 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!