ஹஷிஷ்’ போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய யுவதி கைது!

#SriLanka #ARREST #Airport #drugs #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 months ago
ஹஷிஷ்’ போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய யுவதி கைது!

36 கிலோகிராம் ‘ஹஷிஷ்’ போதைப்பொருளுடன் 18 வயதுடைய கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்கா பண்டார்நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 352 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர், நேற்று இரவு (23) சுமார் 10:40 மணியளவில், கனடாவின் டொராண்டோவிலிருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானம் EK 648-ல் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். 

சோதனையின் போது, ​​சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,265 கிராம் (35.265 கிலோகிராம்) ஹஷிஷ் போதைப்பொருளைக் கண்டுபிடித்தனர்.

 இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தற்போது முதற்கட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!