சுவிட்சர்லந்தின் ஜெனீவாவில் டெஸ்லா காரை எரித்து G7 உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு

#SWITZERLAND #Protest #Geneva #LANKA4 #Summit #G7 #L4
Prasu
3 months ago
சுவிட்சர்லந்தின் ஜெனீவாவில் டெஸ்லா காரை எரித்து G7 உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு

சுவிட்சர்லந்தின் ஜெனீவா நகரில் G7 உச்சிமாநாட்டிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. இவியன் நகரில் G7 மாநாடு தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நகரின் நடுவே ஊர்வலம் சென்ற போராட்டக்காரர்கள் ஒரு டெஸ்லா காருக்குத் தீ வைத்துள்ளனர். மேலும், வங்கி ஜன்னல்களை உடைத்தும், பொலிஸார் மீது கற்களை எறிந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீர்ப் புகையையும் பயன்படுத்தினர்.

"G7 கூட்டணி வேண்டாம்" என்று வலியுறுத்தும் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சுமார் 20,000 பேர் கலந்துகொண்டனர்.

அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் பெரும் பணக்கார நாடுகளான G7 நாடுகளின் வசம் மட்டுமே இருப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஜெனீவா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!