வலி. வடக்கில் 651 ஏக்கர் பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் வீதியில்!
யாழ்ப்பாணம் - வலி. வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக (HSZ) உள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்களினால் காங்கேசன்துறை - தொண்டைமானாறு வீதிக்கு அருகேயுள்ள இராணுவத்தினரின் "கொமண்டோ" பங்களா முன்பாக இன்று (05) ஏழாவது வெள்ளிக்கிழமையாகவும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்களின் இந்த அமைதிவழிப் போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
வலி. வடக்கின் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத பகுதியில் அவர்களது சொந்த இடங்களை விட்டு இராணுவத்தினால் வெளியேற்றப்பட்டனர்.
ஆயுதப் போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், பாதுகாப்புத் தரப்பினர் இப்பகுதிகளில் இருந்து வெளியேறாததால் இவை இன்னமும் உயர் பாதுகாப்பு வலயமாகவே நீடிக்கின்றன.
தமக்குச் சொந்தமான சுமார் 651 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட நிலங்களை விடுவிக்குமாறு மக்கள் பல வருடங்களாகப் போராடி வருகின்றனர்.
எனினும், இதுவரை உரிய தீர்வு எட்டப்படவில்லை.
தமது நிலங்கள் மீட்கப்படும் வரை, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகக் காணி உரிமையாளர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
♻️வீட்டுக்கடன் (HYPOTHEK)
♻️வீடு விற்க, (HAUSVERKAUFEN)
♻️வீடு வாங்க, (HAUSKAUFEN)
♻️வீடு கட்ட, (HAUSBAUEN)
♻️வீடு திருத்த. (RENOVATION)
SHELVA SWISS
IMMO
041 790 64 64
079 514 64 28
#SHELVA #IMMOBILIEN #HYPOTHEK #HAUSKAUFEN #HAUSVERKAUFEN
(வீடியோ இங்கே )