05 மாதத்தில் 33 ஆயிரத்திற்கும் அதிகமான டெங்கு தொற்றாளர்கள் பதிவு!
#SriLanka
#Dengue
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
நாட்டில் 33,572 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மே மாதத்தில் மாத்திரம் 8321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நோயாளர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு நோயாளர்களில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம் 72 சுகாதார அதிகாரி பிரிவுகள் (MOH) அவதானமிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )