நுவரெலியாவில் மரண தண்டனை கைதி விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி!

#SriLanka #NuwaraEliya #prisoner #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
நுவரெலியாவில் மரண தண்டனை கைதி விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி!

நுவரெலியா மாவட்டத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர்  விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறித்த கைதி தற்போது நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, அந்த கைதி சிறை அறையின் கழிவறைக்குள் இருந்தபோது விஷம் அருந்தியதாகக் கூறப்படுகிறது. 

 கொலை வழக்கு தொடர்பாக நுவரெலியா உயர் நீதிமன்றம் நேற்று (29) அவருக்கு மரண தண்டனை விதித்த சிறிது நேரத்திலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 மேலும், சந்தேக நபர் உட்பட மொத்தம் நான்கு நபர்களுக்கு இதே வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!