சிறையில் தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி ஜெயகுமாரின் இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடத்த முடிவு!

#SriLanka #Jaffna #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
சிறையில் தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி ஜெயகுமாரின் இறுதிச்சடங்கு சனிக்கிழமை நடத்த முடிவு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 24, 2026) இரவு சிறைச்சாலை கூடத்திற்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

அண்மையில் (மே 06, 2026) இந்த வழக்கின் மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு பேருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்குப் பின்னரான மன உளைச்சல் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஜெயக்குமாரின் உடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. சட்ட நடைமுறைகள் மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலத்தை சனிக்கிழமை (மே 30, 2026) அன்று அடக்கம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவரது சொந்த ஊரான புங்குடுதீவு பகுதியில் அல்லது குடும்பத்தினர் தீர்மானிக்கும் இடத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வித்தியா கொலை வழக்கில் 2017-ம் ஆண்டு வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு ஒன்பது ஆண்டுகளின் பின் தள்ளுபடி செய்யப்பட்டு, தண்டனை உறுதி செய்யப்பட்ட சில நாட்களிலேயே இந்தக் கைதியின் மரணம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4