களுத்துறை பள்ளிவாசல் வீதி பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!

#SriLanka #Investigation #Crime #GunShoot #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
களுத்துறை பள்ளிவாசல் வீதி பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!

களுத்துறை, பள்ளிவாசல் வீதி, வெட்டுமக்கடை பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இதில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

கிடைக்கப்பெற்ற முதற்கட்ட தகவலின்படி, இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. 

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

 இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தற்போது மூன்று பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4